தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் வலிமை திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஹச் வினோத் சூப்பராக எடுத்துள்ளார் மேலும் போனி கபூர் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்துள்ளார்.
இந்த படத்திற்கு ஜிப்ரான் தரமாக இசையமைத்துள்ளார் மொத்தம் இந்த படத்தில் 3 பாடல்கள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படம் குறித்து ஒரு தரமான தகவல்கள் வெளியாகி உள்ளது அதாவது தமிழ்நாட்டில் அஜித்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
அதனால் அங்கு மிகப்பெரிய அளவில் வியாபாரம் நடந்துள்ளது என சொல்லப்பட்டது அதேபோல வெளிநாடுகளிலும் நடிகர் அஜித்திற்கு என மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதனாலையே ஓவர் சீஸ் எரியாவில் நல்ல கோடிக்கு துணிவு திரைப்படம் விற்பனையாகி உள்ளது. அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம்..
துணிவு திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று சுமார் 18 கோடி கொடுத்து கைப்பற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது துணிவு திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை அதிக தொகைக்கு விற்பனையாகி இருப்பது தற்பொழுது நடிகர் அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது மேலும் இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.