தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் அரசியலிலும் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலினை பற்றி ஏராளமான சர்ச்சை கூறிய தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது அவருடைய மகன் இன்ப நிதி பற்றிய புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் பதறிப்போன கீர்த்திகா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அந்த புகைப்படம் குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவிற்கு குருவி திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் பிறகு ஆதவன் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனை அடுத்து ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை பெரிதளவில் கவர்ந்தார் இவ்வாறு இவருடைய நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2002ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் கிருத்திகா மற்றும் உதயநிதி ஸ்டாலின் தம்பதியினர்களுக்கு இன்ப நிதி என்ற மகனும் தமன்யா என்ற மகளும் உள்ளனர். இறுதியாக நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்ற நிலையில் இதனை அடுத்து சமீபத்தில் விளையாட்டு துறை அமைச்சராகவும் பதவியேற்று உள்ளார்.
இவ்வாறு முழு நேரம் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் இதற்கு மேல் திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளார். மேலும் கடைசியாக இவருடைய நடிப்பில் மாமன்னன் திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்நிலையில் இவருடைய மகன் ஒரு கால்பந்து வீரர் எனவே சில வாரங்களுக்கு முன்பு நெரோகா எஃப்சி என்ற கால்பந்து அணிக்கு தமிழகத்திலிருந்து உதயநிதியின் மகன் தேர்வாகியுள்ளார்.
எனவே பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் தற்பொழுது உதயநிதியை அமைச்சரானதற்கு பிறகு அவருடைய மகன் இன்பநதியும் சமூக வலைதளங்களில் அடிக்கடி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இன்பநதி தனது தோழியுடன் இருக்கும் சில புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
எனவே திமுகவிற்கு எதிரானவர்கள் பலரும் இதனை பகிர்ந்து கேலி செய்து வருகிறார். மேலும் இன்னும் சிலர் இன்ப நதிக்கு ஆதரவளித்து வரும் நிலையில் இதனை தெரிந்து கொண்ட உதயநிதியின் மனைவி கிரித்திகா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘காதலிப்பதற்கு அதை வெளிப்படுத்துவதற்கும் எப்போதும் பயப்படக்கூடாது இயற்கை அதன் முழு மகிமையில் புரிந்து கொள்வதற்கான விழிகளில் இதுவும் ஒன்றாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.