சஞ்சய் தத்தை தொடர்ந்து மற்றொரு ஒரு வில்லன் நடிகரை படத்தில் இணைத்த லியோ டீம்.. அட இவரா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

leo

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனராக திகழ்வு லோகேஷ் கனகராஜ். இவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில்  கடைசியாக கமலை வைத்து லோகேஷ் எடுத்த “விக்ரம்” திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று உலகம் முழுவதும் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது.

அதனைத் தொடர்ந்து  தளபதி விஜயை வைத்து “லியோ” என்னும் திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது படத்தில் விஜய் உடன் கைகோர்த்து அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த்..

திரிஷா, டான்ஸ் மாஸ்டர் சாண்டி என பல திரை பிரபலங்கள் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர். லியோ படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் சென்னையில் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து இரண்டாவது கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிர் என்று கூட பார்க்காமல் நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

வருகின்ற மார்ச் 25ஆம் தேதி உடன் காஷ்மீரில் சூட்டிங் முடியும் என படக் குழு கணித்துள்ளது. அதை தொடர்ந்து சென்னையில் ஷூட்டிங்கை நடத்த இருக்கிறதாம்.  இதுவரை மிஷ்கின், கௌதம் மேனன் போன்ற காட்சிகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் லியோ திரைப்படத்திலிருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் மேலும் ஒரு வில்லனை படக்குழு கமிட் செய்துள்ளது. அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல…

தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி கண்டு வரும்  நடிகர் “மதுசூதனன் ராவ்” தான் லியோ திரைப்படத்தில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.  விஷயத்தை கேள்விப்பட்ட தளபதி ரசிகர்கள் லியோ படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படம் நிச்சயம் ஹாலிவுட் இஞ்சுக்கு இருக்கும் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

madhusuthanan rao
madhusuthanan rao