தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அஞ்சலி தற்பொழுது பிரபல நடிகரின் படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்பெஷல் டான்ஸ் ஆட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி.
இதுதான் இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதன் காரணமாக இவருக்கு அங்காடி, தெரு எங்கேயும் எப்போதும்,கலகலப்பு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறினார்.
இந்நிலையில் தற்பொழுது இவர் நிவின் பாலி ராம் படம், சங்கர் ராம்சரண் படம் என இரண்டு படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பணம் வந்து கொண்டிருக்கும் நிதின் நடிக்கும் படம் Macherle Niyojakavargam. இத்திரைப்படத்தில் க்ரிதி ஷெட்டி, கேத்தரின் தெரசா உள்ளிட்ட ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
இந்த படத்தில் அஞ்சலி RaRa Reddy I Am Ready என்ற ஸ்பெஷல் பாடலில் தோன்றியவுள்ளார். சமீப காலங்களாக சமந்தா, பூஜா ஹெட்,ரெஜினா உள்ளிட்டோர்களின் ஸ்பெஷல் பாடல்கள் ஹிட் அடித்த நிலையில் அடுத்தது அஞ்சலியும் இதனை பின்பற்றுகிறார்.
The Massiest Song of this Season#RaRaReddyIAmReady from #MacherlaNiyojakavargam 💃🏻
LYRICAL ON JULY 9th! 🤘🏻🤩
🎤#Lipsika
✍🏻@LyricsShyam
🥁#MahathiSwaraSagar@actor_nithiin @IamKrithiShetty @CatherineTresa1 @SrSekkhar @SreshthMovies @adityamusic#MNVFromAug12th pic.twitter.com/jAbUGPUjdp— Anjali (@yoursanjali) July 4, 2022