ரக்ஷனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6ல் களமிறங்கிய குக் வித் கோமாளி பிரபலம்.! அட, இவர் இந்த சீரியல் நடிகை ஆச்சே..

BIGG-BOSS-6
BIGG-BOSS-6

விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களாக மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஷோ தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான போட்டியாளர்கள் தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள். அப்படி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத பிரபலங்கள் சின்னத்திரையில் பணியாற்றி வருபவர்களும் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிக்பாஸ் ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக ஆறாவது சீசன் ஒளிபரப்புவதற்காக தொடர்ந்த அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து வரும் நிலையில் விரைவில் பிக்பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்த ரக்சன் தற்பொழுது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கடைசியாக ரக்சன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பணியாற்றி இருந்தார் இப்படிப்பட்ட நிலையில் மற்றொரு விஜய் டிவி பிரபல சீரியல் நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

அதாவது பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த ரோஷினி ஹரி பிரியன். இவர் தன்னுடைய முதல் சீரியலிலே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த நிலையில் பிறகு திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக சீரியலில் நடிப்பதில் இருந்து விலகி சோசியல் மீடியாவில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வந்தார்.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்த இவர் தற்பொழுது பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. மேலும் பிக்பாஸ் சீசன் 6ல் சூப்பர் சிங்கர் பிரபலம் கிராம பாடகி ராஜலட்சுமி, இசையமைப்பாளர் டி இமான் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட், பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக், நடிகை ஷில்பா மஞ்சுநாத், குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், ஜீ தமிழ் சீரியல் நடிகை ஸ்ரீநிதி, சத்தியா சீரியல் ஆயிஷா, டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து, விஜய் டிவி செல்லப்பிள்ளை டிடி உள்ளிட்ட பலரும் கலந்து கள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 2ம் தேதி முதல் துவங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 6ல் 17 முதல் 20 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்பது உறுதியாகி உள்ளது ஆனால் இந்த பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள் என்பதை பற்றி அதிகாரப்பூர்வமான தகவலை இதுவரையிலும் வெளியிடவில்லை.