தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தற்பொழுது கேப்டன் திரில்லர் திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.இப்படிப்பட்ட நிலை தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர்கள் ஒருவர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்று இதனைத்தொடர்ந்து அடுத்ததாக இவர் நடித்துள்ள வாத்தி திரைப்படம் மற்றும் நானே வருவேன் இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அடுத்ததாக தனுஷ் நடிக்க இருக்கும் திரைப்படத்தினை சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த படத்திற்கு கேப்டன் மில்லர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இவர்களை தொடர்ந்து ஜீவி பிரகாஷ் அவர்கள் இசையமைக்க உள்ளார்.
மேலும் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் தற்போது தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் இணைந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் மலையாளம் முன்னணி நடிகர் விநாயகர் வில்லன் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெய்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படம் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.