தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிர்வாணமாக விளங்கி வருவது சன் பிக்சர் நிறுவனம் தான், சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதன்முதலில் ரஜினி நடிப்பில் வெளியாக எந்திரன் திரைப்படத்தை தயாரித்து தான் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை வெளி உலகத்திற்கு கொண்டு வந்தார்கள்.
அதன் பிறகு நீண்ட காலங்களுக்கு படத்தை தயாரிக்கவில்லை பிறகு விஜய் நடிப்பில் வெளியாகிய சர்கார் திரைப்படத்தை தயாரித்த வநதார்கள். அதன்பிறகு சர்கார் படத்திற்கு பிறகு ரஜினியின் பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து நம்ம வீட்டு பிள்ளை, காஞ்சனா 3 ஆகிய திரைப்படங்களை தயாரித்து இருந்தார்கள்.
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூர்யாவின் 40வது திரைப்படத்தையும் தனுஷின் 43வது திரைப்படத்தையும் சன் நிறுவனம் தயாரிக்கிறது. அதுமட்டுமில்லாமல் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 65 திரைப்படத்தையும் தயாரிக்க இருக்கிறது இந்த தயாரிப்பு நிறுவனம்.
மேலும் கமல் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தையும் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது ஏனென்றால் சங்கர் மற்றும் கமலுக்கு லைக்கா நிறுவனத்திற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் கை விடப் போவதாக தகவல் வெளியானது.
அதனால் இந்தியன் 2 திரைப்படத்தில் லைக்காவிற்கு பதிலாக சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.