ரஜினி, நெல்சனை தொடர்ந்து அனிருத்துக்கு பிரம்மாண்ட பரிசை கொடுத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்.! வைரலாகும் புகைப்படம்

Anirudh
Anirudh

Anirudh : சினிமா உலகில் ஒரு புது படம் வெளிவந்தால் பல சாதனைகளை முறியடிப்பது வழக்கம் அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்  ரஜினி நடிப்பில் உருவான  படம் ஜெயிலர். ரஜினியுடன் இணைந்து  மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.  படத்தில் ரஜினியின் மாறுபட்ட நடிப்பு, விநாயகத்தின் ரவுடிசம், மோகன்லால் – சிவராஜ்குமாரின் மாஸ் என்ட்ரி, யோகி பாபு காமெடி என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது வரை போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்தை பார்த்து வருகின்றனர்.

இதனால் ஜெயிலர் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது இதுவரை மட்டுமே 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது இந்த படத்தின் வெற்றியால் சந்தோஷமடைந்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் படத்தில் சிறப்பாக பணியாற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் ஆகியவர்களுக்கு பரிசுகளை கொடுத்து அசத்தினார்.

அந்த வகையில் ரஜினிக்கு செக் மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 சீரிஸ் காரை பரிசாக வழங்கினார் அதே போல நெல்சனுக்கு செக் ஒன்றை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் சொகுசு கார் ஒன்றை கொடுத்து அசத்தினார் இந்த படத்தில் இவர்கள் மட்டும் இல்லாமல் இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமாக பங்காற்றிய..

படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் ஏதாவது கொடுக்க வேண்டும் என்பதை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில் கலாநிதி மாறன் அவர்கள் தற்பொழுது அனிருத்தை சந்தித்து செக் ஒன்றை கொடுத்துள்ளார். அதன் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.