தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திர நடிகர்கள் பலரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் போட்டி என வந்துவிட்டால் மோதிக்கொள்வது வழக்கம் அந்த வகையில் விசேஷ நாட்களில் டாப் ஹீரோக்களின் படங்கள் மோதுகின்றன. கடந்த பொங்கலை முன்னிட்டு கூட அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்கள் மோதின..
இந்த இரண்டு திரைப்படங்களுமே நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது அதனைத் தொடர்ந்து வருகின்ற தீபாவளியை முன்னிட்டு பல படங்கள் மோத இருக்கின்றன அதன்படி ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருப்பாதால் நிச்சயம் ஜெயிலர் படம் தீபாவளிக்கு வெளிவந்து ஹிட் அடிக்கும் என சொல்லப்படுகிறது
இந்த படத்தை எதிர்த்து தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன், சாகசம் கலந்த திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த இரண்டு திரைப்படங்களும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாம்.. இதனால் வேறு எந்த படமும் எதிர்த்து மோதாது என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சைலண்டாக நடிகர் கார்த்தியின் ஜப்பான் தீபாவளி ரேசில் கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கார்த்தி இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தை மிக சூப்பராக ராஜு முருகன் இயக்கி உள்ளார். படத்தின் ஷூட்டிங் இரவு / பகல் பார்க்காமல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த தீபாவளி ரேஸில் ரஜினியின் ஜெயிலர், தனுஷின் கேப்டன் மில்லர் ஆகிய படங்களை எதிர்த்து கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் மோதுவது கிட்டத்தட்ட உறுதி என சொல்லப்படுகிறது.
நடிகர் கார்த்திக் தொடர்ந்து டாப் ஹீரோ படங்களுடன் போட்டி போட்டு வருகிறார். கடைசியாக விஜயின் மாஸ்டர் படத்தை எதிர்த்து கைதி படம் வெளிவந்து வெற்றி பெற்றது. தற்பொழுது ஜெயிலர் மற்றும் கேப்டன் மில்லர் படங்களை எதிர்த்து மோதுகிறார். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் நடிகர் கார்த்தி மார்க்கெட் அசுர வளர்ச்சியை ஈட்டும் என கூறப்படுகிறது