ராஜா ராணி 2 அர்ச்சனாவை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் ஜீ தமிழ் சீரியல் நடிகை.!

zee-tamil

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவி தொடர்ந்து ஏராளமான புதிய நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றார்கள்.அந்த வகையில் கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.சில மாதங்களுக்கு முன்பு பிக்பாஸ் சீசன் 5 நிறைவு பெற்ற நிலையில் கூடிய விரைவில் ஆறாவது சீசன் தொடங்க இருக்கிறது.

அதற்கான பணிகளை தொடர்ந்து வரும் நிலையில் தற்போது விஜய் டிவி மாற்ற சீசன்களில் இல்லாத புதிதாக சாதாரண மக்களும் விருப்பம் இருந்தால் போட்டியாளராக பங்கு பெற முடியும் அதனை லெட்டர் மூலம் விஜய் டிவிக்கு அனுப்பி அறிவிக்கலாம் என கூறியுள்ளார்கள்.இதன் காரணமாக யார் யாரெல்லாம் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சின்னத்திரை நடிகைகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் மேலும் ஏராளமான பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்கள் தற்பொழுது பெரிதாக இந்நிகழ்ச்சியில் யாரும் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த அசத்தி வந்த அர்ச்சனா திடீரென்று சீரியலில் இருந்து விலகினார் மேலும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாகவும் தன்னுடைய சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்.

ayisha
ayisha

இவ்வாறு இவரைத் தொடர்ந்து மற்றொரு சின்னத்திரை நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியலில் நடித்த பிரபலமானவர்தான் நடிகை ஆயிஷா. சத்யா சீரியல் கிளைமாக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அடுத்த மாதம் இந்த சீரியல் முடிய உள்ளது.

இதன் காரணமாக ஆயிஷா பிக்பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக காத்து வருகிறார்கள். அடுத்த மாதம் இறுதிக்குள் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.