மாஸ்டர் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல மடங்கு சம்பளத்தை ஏற்றிக்கொண்ட லோகேஷ் கனகராஜ்.

lokesh kanagaraj
lokesh kanagaraj

lokesh kanagaraj next movie : தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருகிறார், இவர் பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இதற்குமுன் இயக்கிய மாநகரம் மற்றும் கைதி ஆகிய திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது அதனால், தான் ஒரு சிறந்த இயக்குனர் என தமிழ் சினிமாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி விட்டார் லோகேஷ் கனகராஜ்.

அதனால் ரசிகர்களிடம் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது, இதற்கு காரணம் அவர் எடுத்த முயற்சிதான், சிறிய பட்ஜெட்டில் கோடிக்கணக்கான லாபம் கொடுக்கும் திரைப்படங்களை சுவாரசியமாக இயக்குவதில் வல்லவர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்திற்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள், மாஸ்டர் திரைப்படம் வெளியான பிறகு லோகேஷ் கனகராஜ் மார்க்கெட் நிலவரம் தெரியவரும் என அனைவரும் கூறிய நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய சம்பளத்திற்க்காக அடுத்த படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார் என கூறப்படுகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குவதற்காக லோகேஷ் கனகராஜ் கிட்டத்தட்ட மாஸ்டர் திரைப்படத்தில் வாங்கிய சம்பளத்தை விட நான்கு மடங்கு அதிகமாக பேசப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் திரைப்படத்தில் வாங்கிய சம்பளத்தையையே புதிய திரைப்படத்தை இயக்குவதற்காக அட்வான்ஸாக அதே தொகையை வாங்கி விட்டாராம் அந்த படத்தை இயக்குவதாக லோகேஷ் கனகராஜ் இவருக்கு இந்த சம்பளம் கொடுப்பதில் தவறு இல்லை என கோலிவுட் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

ஏனென்றால் பல இயக்குனர்கள் படத்தை இயக்குகிறேன் என்ற பெயரில் தயாரிப்பாளரின் தலையில் துண்டை போட வைத்துவிடுகிறார்கள் அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் மிக சிறந்தவர் என பலரும் கூறி வருகிறார்கள். மாஸ்டர் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் 1.5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. அடுத்து திரைப்படத்திற்கு இதை விட நான்கு மடங்கு அதிகம்  என்றால் நீங்களே கூட்டிக் கழித்துப் பாருங்கள்.