தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல்அகர்வால் இவர் அஜித் மற்றும் விஜய் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர் இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்கு பிறகு தேனிலவுக்காக மாலத்தீவு சென்று அங்கு விதவிதமாக புகைப்படம் எடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
அவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் மிகவும் வேகமாக வைரலாகி வந்தது, தேனிலவை முடித்து விட்டு வீடு திரும்பிய காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக தமிழ் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
கோஸ்ட்டி என்ற டைட்டில் வைக்கப்பட்ட தமிழ் திரைப்படத்தை கல்யாண் என்பவர் இயக்க இருக்கிறார், இவர் ஏற்கனவே ஜாக்பாட் குலேபகவாலி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். இந்த திரைப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் திரைப்படமாக கதை அமைந்துள்ளது.
மேலும் ஃபேண்டசி ஹாரர் திரைப்படமாக உருவாகும் இத்திரைப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, ஸ்ரீமன், தேவதர்ஷினி மற்றும் கோலமாவு கோகிலா புகழ் தோனி என 24 காமெடி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம், காஜல் அகர்வால் ஏற்கனவே சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா மற்றும் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.