நீண்ட வருடங்களுக்குப் பிறகு பெற்றோரான சரவணன் மீனாட்சி ஜோடி.! என்ன குழந்தை தெரியுமா.? வாழ்த்துக்கள் கூறும் பிரபலங்கள்..

mirchi-senthil
mirchi-senthil

வெள்ளித்திரையில் எப்படி நட்சத்திர ஜோடிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருக்கிறார்களோ அதேபோல் சின்னத்திரையிலும் நட்சத்திர ஜோடிகள் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் சின்னத்திரையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நட்சத்திர ஜோடிகள் தான் மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா.

மிர்ச்சி சிந்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரைகள் பிரபலமடைந்து வரும் நிலையில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முக்கியமாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் இந்த சீரியலில் இவருக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் நடிகை ஸ்ரீஜா இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதால் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு ஸ்ரீஜா பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டவில்லை இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து மிர்ச்சி செந்தில் சீரியல்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவருக்கும் திருமணமாகி சில வருடங்கள் கழித்து தற்பொழுது குழந்தை பிறந்துள்ளது  அதாவது சில மாதங்களுக்கு முன்பு தாங்கள் பெற்றோர்களாக போவதை செந்தில் சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்.

மேலும் வளைய காப்பு புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலானது. எனவே ரசிகர்கள் சின்னத்திரை பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் தற்போது இந்த தம்பதியினர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளத்தில் செந்தில் வெளியிட்டுள்ளார் எனவே இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக தொடர்ந்து ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.