தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து வரும் அட்லி தமிழில் ராஜா ராணி திரைப்படத்தின். மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிறகு நடிகர் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கிய நிலையில் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்றது. எனவே தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பிடித்தார்.
மேலும் இயக்குனராக அறிமுகமாகி பிறகு தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்பொழுது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார் அதாவது இயக்குனர் அட்லி ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தினை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் இயக்குனர் அட்லி சின்னத்திரை நடிகை பிரியாவை காதலித்து வந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. பிரியா சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் அதன் பிறகு சில சீரியல்களில் நடித்து வந்த இவர் வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார்.
இவ்வாறு திருமணத்திற்கு பிறகு பிரியா நடிப்பதை நிறுத்தி இருந்தாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தார் மேலும் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் பதிவிட்டு வந்த நிலையில் சமீபத்தில் இவர்களுடைய திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார் இதற்கு ரசிகர்கள் பிரபலங்களின் அனைவரும் வாழ்த்துகள் கூறியிருந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அட்லி அவர்கள் ஒரு சந்தோஷமான செய்தியை சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். அதாவது தான் அப்பாவாகிய தகவலை பகிர்ந்துள்ளார் பிரியா மற்றும் அதில் இருவருக்கும் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகிறது தற்பொழுது பிரியா கர்ப்பமாக இருக்கிறார் இதை தான் அட்லீஸ்ட் சோசியல் மீடியாவில் அறிவித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது, Happy to announce that we are pregnant need all your blessings and love. Wit love – Atlee & Priya இன்று குறிப்பிட்டிருக்கிறார். தற்பொழுது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.