Meera mithun : நடிகை மீரா மிதுன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பல்வேறு சர்ச்சையான விஷயங்களை செய்தார். அதுவும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது சேரன் மீது அப்பட்டமாக பழி சுமத்தி அவரை அழ வைத்துவிட்டார்.
அந்த சலசலப்பு அடங்குவதற்குள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக்பஸ் வீட்டில் இருக்கும்பொழுது ரசிகர்களால் அதிகம் வெறுக்க பட்டவர்களில் மீராமிதுன் ஒருவர் அதன் பிறகு வனிதாவை தான் அதிக ரசிகர்கள் அதிகம் வெறுத்தார்கள், பிக்பாஸ் வீட்டில் இருக்கும்பழுது பிரபலமானதைவிட அவப்பெயர் தான் அதிகம் கிடைத்தது இவருக்கு.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் மீரா மிதுன் அடங்காமல் ஏதாவது சர்ச்சையை கிளப்பி வருகிறார், அந்தவகையில் மீரா மிதுன் அடிக்கடி சமூகவலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.
புகைப்படத்தை வெளியிட்டு பிரபலமடைய முடியாமல் தவித்து வந்த மீரா மிதுன் முன்னணி நடிகர்களை வம்புக்கு இழுத்து அதன் மூலம் ஆதாயம் தேடி வருகிறார், அந்த வகையில் ரஜினி, சூர்யா, விஜய், தனுஷ் ஆகியோர்களை பற்றி சர்ச்சையான விஷயங்களை பேசி ரசிகர்களிடையே வெறுப்பை சம்பாதித்தார். அது மட்டுமில்லாமல் சூர்யா மனைவி ஜோதிகாவையும் விஜய் மனைவி சங்கீதாவையும் அவதூறாக பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
பிறகு ரசிகர்கள் மீரா மிதுனை விட்டு வைத்தது போல் தெரியவில்லை அந்த அளவு கண்டபடி வசை பாடினார்கள் ஆனால் மீராமிதுன் அதற்கு கொஞ்சம் கூட சலிக்காமல் சரமாரியாக டுவிட்டரில் தங்களது கருத்தை தெரிவித்து வந்தார். கடந்த ஒருவார காலமாகவே ட்விடடர் போர்க்களமாக இருந்தது. அதனால் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் எந்த ஒரு புகைப்படத்தையும் பதிவிடாமல் இருந்தார.
இந்த நிலையில் முதன் முதலாக நீண்ட நாள் கழித்து இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது இதை பார்த்த ரசிகர்கள் இதுபோல் புகைப்படத்தை வெளியிட்டு ஆதாயம் தேடிக் கொள்ளலாம் ஆனால் நீ முன்னணி நடிகர்களை கேவலமாக பேசுவதை நிறுத்திக் கொள் என தங்களது கமெண்ட்களை பறக்க விட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் மிகவும் பச்சை பச்சையான வார்த்தைகளால் மீரா மிதுன் அவர்களை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.
புகைப்படம் இதோ Click Here