Lakshmi menon next movie : திரையுலகில் முதல் படமே ஹிட் அடித்து அப்படத்தின் மூலம் பிரபலமடைவது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான் ஆனால் இதையெல்லாம் உடைத்து கும்கியில் தனது நடிப்புத் திறமையினால் முதல் படத்திலேயே வெற்றி பெற்றவர் தான் நடிகை லட்சுமி மேனன்.
நடிகை லட்சுமிமேனன் 1996ஆவது வருடம் மே மாதம் 19ஆம் தேதி அன்று கேரள மாநிலத்தில் பிறந்துள்ளார். தமிழ் சினிமாவில் கும்கி என்ற திரைப்படத்தின் மூலமாக தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்தப் படம் 2012ஆம் ஆண்டு வெளியானது. விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்த இப்படம் வெற்றி பெற்றது.
அதன்பிறகு தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டு வந்ததால் பிறகு பள்ளி படிப்பைத் தொடர்வதற்காக சினிமாவில் இருந்து சற்று ப்ரேக் எடுத்துக்கொண்டார்.
பிறகு மீண்டும் திரையுலகிற்கு வந்து சுந்தரபாண்டி, குட்டிபுலி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா, மிருதன் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். இவர் 2015ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் போது கல்லூரியை தொடர்வதற்காக திரும்பவும் போய்விட்டார்.
அதன் பிறகு சினிமாவில் கவனம் செலுத்த வேண்டும் இல்லை என்றால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் இந்த இரண்டையும் என்னால் சமாளிக்க முடியும் என்ற எண்ணத்தில் லஷ்மி மேனன் மீண்டும் கல்லூரியில் படிக்க தொடங்கினார். அதன் பிறகு படிப்பைத் தொடரமுடியாமல் திரும்பவும் சினிமாவில் பிரபலமடைய முடியாமல் கஷ்டப்பட்டு வந்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இவர் நடிகையாகவும் முடியாமல் துணை நடிகையாகவும் முடியாத அளவுக்கு மிகவும் குண்டாக மாறி மீண்டும் வந்துள்ளார். இவர் உடல் எடை கூடியதாலயே அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. இருந்தாலும் லட்சுமிமேனன் மனம் தளராமல் மீண்டும் என்னால் ஹீரோயினியாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவர் ‘எங் மங் சிங்’ என்ற திரைப்படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் எப்போது ரிலீசாகும் என்று இன்னும் முடிவெடுக்கவில்லை.