கண்ணம்மாவை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் 2வது ஆளாக நுழைந்த விஜய் டிவி தொகுப்பாளினி.! வைரலாகும் புகைப்படம்..

bigg-boss-6

விஜய் டிவியில் கடந்த ஐந்து சீசன்களாக மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்நிலையில் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வருகின்ற இரண்டாம் தேதி 17 முதல் 20 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாக இருக்கிறது தற்பொழுது போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் லிஸ்ட் வைரலாகி வருகிறது. மேலும் இந்த முறை சற்று வித்தியாசமாக பிக்பாஸ் சீசன் ஆறில் பொதுமக்களும் கலந்து கொள்ளப் போகிறார்கள்.

மேலும் அதில் இரண்டு போட்டியாளர்கள் சாதாரண மக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் விஜய் டிவியின் பிரபலங்கள் இரண்டு பேர் பிக்பாஸ் சீசன் 6 வீட்டில் முதலாளாக நுழைந்து சோபாவில் அமர்ந்து கொண்டு மைக்கில் அவர்கள் பெயர் எழுதி பிக்பாஸ் போட்டியாளர்கள் போலவே பேசிக் கொண்டு இருக்கிறார்கள் அந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் இவர்கள் இருவரும் ரசிகர்களுக்கு பிடித்த நபர்கள் எனவும் கூறப்படுகிறது அதாவது முன்னணி தொகுப்பாளரான டிடி திவ்யதர்ஷினி தான், இவர் விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பிறகு தன்னுடைய நீண்ட நாள் நபரை திருமணம் செய்து கொண்டு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தார்.மேலும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

dd
dd

இதனை தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த ரோஷினி ஹரி பிரியன் சென்றுள்ளார் அங்கு டிடி மற்றும் ரோஷினி ஹரி பிரியன் இருவரும் பேசிக் கொண்டு  இருக்கிறார்கள். இவ்வாறு மற்ற பிரபலங்களுக்கு எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு தருகிறதோ அதேபோல் முக்கியமாக விஜய் டிவியில் பணியாற்றி வரும் அனைவருக்கும் அனைத்து சீசன்களிலும் வாய்ப்பு கொடுத்து வருகிறது.

இவ்வாறு இவர்கள் இருவரும் சுவாரசியமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வரையிலும் இல்லாத அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக பிக்பாஸ் செட் அமைக்கப்பட்டு இருக்கிறது எனவே மற்ற சீசன்களை விட இந்த சீசன் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.