கமலின் அண்ணாத்த ஆடுறார் பாடலை தொடர்ந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்ட அஸ்வின்.! வேற லெவல் வீடியோ

vijay
vijay

சமூக வலைத்தளத்தில் மூலம் பலரும் மிக வேகமாக பிரபலமாகி வருகிறார்கள், அந்த வகையில் தற்பொழுது இளைஞர்கள் மத்தியில் டிக்டாக் போன்ற ஆப் இளசுகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, கையில் மொபைல் போன் இருந்தாலே டிக் டாக் செய்வதும், டிக் டாக் பார்ப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்கள் பல இளசுகள்.

அவர்கள் லைக் வாங்குவதற்காக வீடியோவை வெளியிட்டு லட்சக்கணக்கான லைக்ஸ் பெற்று வருவதும் உண்டு, லைக்ஸ்க்காக ஆசைப்பட்டு  பல பல வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் அபூர்வ சகோதரர் பாடலுக்கு ட்ரெட்மில்லில் ரசிகர் ஒருவர் நடனமாடி வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் அந்த வீடியோ மிக வேகமாக ட்ரெண்ட் ஆனது.

இந்த வீடியோவை பார்த்து நடிகர் கமலஹாசன் பாராட்டி ட்வீட் செய்திருந்தார், நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்றடைந்ததா என்ற சந்தேகம் எல்லா கலைஞர்களுக்கும் உண்டு என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார் அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை வாழ்க மகனே என தலைமுறைகள் விஞ்ச பார்த்து மகிழ்வது என் கடமை பெருமை என பதிவிட்டுள்ளார்.

இந்தநிலையில் அஸ்வினுக்கு டிக் டாக்கில் அதிக ரசிகர்கள் உண்டானர்கள் இப்படி இருக்க விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு ட்ரெட்மில்லில் நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார், இந்த வீடியோ விஜய் ரசிகர்களையும் கவர்ந்து விட்டது முதலில் கமல் ரசிகர் அடுத்து விஜய் ரசிகர்கள் என ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார் அஸ்வின்.