தற்போது சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்கிற வார்த்தை அதிகமாகி விட்ட நிலையில் அதை பல பிரபலங்கள் பேட்டிகளில் ஓப்பனாக கூறி வருகிறார்கள் ஆனால் ஒரு சிலர் அவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் செய்ததை வெளியே சொன்னால் எங்கு நமக்கு சினிமா வாழ்க்கை போகி விடுமோ என்று எண்ணி அதை அப்படியே மூடி மறைத்து விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிக்கும் நடிகை தற்போது இது போன்ற ஒரு சம்பவத்தில் சிக்கியுள்ளார் அதைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒரு முதன்மை சீரியலாக விளங்கி வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து இந்த தொடரில் அதிக மக்களை கவர்ந்து உள்ள ஒரு கதாபாத்திரம் என்றால் அது முல்லை கதாபாத்திரம் தான் இந்த கதாபாத்திரத்தில் முதலில் சித்ரா அவர்கள் நடித்துக் கொண்டிருந்தார் ஆனால் இவர் திடீர் மரணத்திற்கு பிறகு அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவை தவிர வேற எந்த நடிகையையும் பார்க்க முடியாத அளவிற்கு முல்லையாகவே நடித்திருப்பார்.
அவர் அந்த முள்ளை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை காவியா. இவர் சித்ரா அளவுக்கு இல்லை என்றாலும் ரசிகர்கள் இவரை முல்லையாக ஏற்றுக் கொண்டனர். ஆனால் தற்போது இவருக்கு பட வாய்ப்பு தற்போது புரிந்து கொண்டிருப்பதால் அந்த கதாபாத்திரத்தில் மூன்றாவது முளையாக வேற ஒரு நடிகை தற்போது நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது விஜய் டிவியில் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்த பிரபலமான லாவண்யா தான் அடுத்த முல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை காவியா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்க வந்த புதிதில் தயாரிப்பாளர் ஒருவர் நடிகை காவியாவிற்கு அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் கொடுத்து இருக்கிறார் அதாவது என்னுடன் ஆறு மாதம் நீ வாழ்ந்தால் உன்னுடைய ரேஞ்சே வேற மாதிரி மாறிவிடும் என்று அந்த தயாரிப்பாளர் தற்போது உள்ளாக நடித்து வரும் லாவண்யாவிடம் கூறியிருக்கிறார்.
அதாவது அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தையை மறைமுகமாக அந்த தயாரிப்பாளர் லாவண்யா என்னுடன் ஆறு மாதம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத லாவண்யா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அந்த தயாரிப்பாளர் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் செய்ததை வெளியே சொன்னால் எங்கு தனக்கு திரை வாழ்வுக்கு சிக்கலாகி விடுமா என்று எண்ணி அந்த விஷயத்தை அப்படியே மூடி மறைத்து விட்டதாக கூறப்படுகிறது.