நடிகை திரிஷா இதுவரைக்கும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் தற்போது கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சூர்யா, என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்துள்ளார். சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகை திரிஷாவிற்கு சினிமா மார்க்கெட் உயர்ந்துள்ளது இதேபோல முன்னணி நடிகர்களின் படங்களிலும் வாய்ப்பு குவிந்து வருகிறது. 40 வயதை நெருங்கு போகும் நடிகை திரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்ளாதது குறித்து அதற்கான காரணத்தை கூறியுள்ளார் நடிகரும் பிரபல பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.
இது குறித்து பேசிய பயில்வான் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகை திரிஷாவிற்கு மார்க்கெட் உயர்ந்துள்ளதாகவும் தற்போது அவர் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வளம் வருகிறார் என்று கூறியுள்ளார். துணை நடிகையாக அறிமுகமான திரிஷா அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பிடித்தார்.
இதனை தொடர்ந்து நடிகை திரிஷாவிற்கும் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்தை மாற்றிக் கொண்டனர். ஆனால் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவில்லை. அதன் பின்னர் தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்தார் திரிஷா சில வருடங்களாக ஒன்றாக இருந்து வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் காதல் தோல்வியினால் பிரிந்து விட்டனர்.
பின்னர் திரிஷா சிம்புவின் காதல் வலையில் சிக்கி மீண்டு வந்தார் . தற்போது திரிஷாவிற்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள் ஆனால் யாரையும் பிடிக்கவில்லை என்று திருமணத்தை தடுத்து நிறுத்துகிறார் திரிஷா. நடிகை திரிஷாவிற்கு நயன்தாராவை போல் நீண்ட நாட்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசை இருக்கிறது அதனால்தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் போதெல்லாம் திருமணமாகி விவாகரத்து செய்தவர்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள் என்று கூறியுள்ளார் நடிகை திரிஷா.
அது மட்டுமல்லாமல் அவர்களைப் போல எனக்கும் விவாகரத்து ஆகிவிடூமோ அதனாலே அவர்களை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதாகவும் திரிஷா கூறி இருக்கிறார். ஆனால் திருமணம் செய்து கொண்டால் எங்கு நம்மால் தற்போது இருப்பதைப் போல ஃப்ரீயாக இருக்க முடியாது என்று எண்ணுகிறார் என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.