கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ஒரு திரைப்படம் என்றால் அது ராட்சசன் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நாயகியாக அமலா பால் நடித்திருப்பார்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய சாதனை படித்துள்ளது அந்த வகையில் இந்த திரைப்படத்தை இயக்குனர் ராம்குமார் அவர்கள் தான் இயக்கிய உள்ளார். மேலும் இந்த திரைப்படம் வெறும் 8 கோடி முதலீட்டில் எடுக்கப்பட்டு 50 கோடி வரை வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது.
இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்திருந்தாலும் சுமார் நான்கு வருடங்களாக எந்த ஒரு திரைப்பட அறிவிப்பையும் வெளியிடாமல் மௌனம் காத்து வந்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் தனுசை வைத்து ராம்குமார் ஒரு திரைப்படம் இயக்க இருந்தார் ஆனால் அவை பாதியில் கைவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து மீண்டும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் படத்தை ராம்குமார் இயக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படமானது ராட்சசன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தை நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் தான் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.