விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் பல ஆண்டு காலங்களாக ஒரே கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமான காலகட்டத்தில் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது பிறகு பாரதி கண்ணம்மாவின் மீது சந்தேகப்பட்டு அவரை வீட்டை விட்டு துரத்தி விட்ட நிலையில் அதன் பிறகு இதனை கலாய்த்து வந்தார்கள். இந்த சீரியலில் முதலில் கண்ணம்மா கேரக்டரில் நடித்து வந்த ரோஷினி ஹரி பிரியன் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததால் இந்த சீரியலில் இருந்து விலகினார்.
இவரை தொடர்ந்து அகிலன், அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்களும் மாற்றப்பட்டார்கள் தற்பொழுது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார் இவரும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நிலையில் இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக அறிமுகமாகி வந்தது. மேலும் சில காலம் வில்லி வெண்பா ரோலில் நடித்து வந்த நடிகைக்கு முக்கியத்துவம் இருக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்தது.
இப்படிப்பட்ட நிலையில் பல பிளான்களை போட்டு வெண்பா பாரதியை திருமணம் செய்துக் கொள்ள சம்மதித்து இருக்கிறார் மேலும் அதே நேரம் பாரதி இது தான் உன்னுடைய அம்மா என்று காட்டிய புகைப்படத்தின் உண்மையைப் பற்றியும் தெரிந்து கொண்டார் எனவே ஹேமாவுக்கு பாரதி கொடுத்த புகைப்படத்தில் இருந்தது என்னுடைய அம்மா இல்லை என தெரிந்து கொண்ட நிலையில் சமையல் அம்மா என்னுடைய அம்மாவாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார்.
ஒருபுறம் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க முடிவு செய்து உள்ளார் எனவே சமீப காலங்களாக கிளைமக்ஸ் நோக்கி சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் குழுவினர்கள் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள் மேலும் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் முடிந்து விட்டதா இல்லை அந்த செட்டில் வேறு யாருக்காவது பிறந்தநாளா என்பது சரியாக தெரியவில்லை விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.