சிம்புவின் ஈஸ்வரன் டீசரை தொடர்ந்து அடுத்தது மாநாடு ஃபர்ஸ்ட் லுக்.! வெங்கட்பிரபு கொடுத்த மாஸ் அப்டேட்

simbu-venkat
simbu-venkat

நடிகர் சிம்பு சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் பாரதிராஜா, இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன், டேனியல் பாலாஜி, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி அஞ்சனா, கீர்த்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வந்தார்கள்.

ஏற்கனவே மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இரண்டு இடங்களிலும் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்தது, அதன்பிறகு கொரோனா தாக்கம் அதிகரித்ததால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதற்கிடையில் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார், சிம்பு மிக வேகமாக நடித்து முடித்துள்ளது மிகவும் பாராட்டுக்குரிய விஷயமாக அனைவரும் பார்த்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் தீபாவளி தினத்தையொட்டி ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

ஈஸ்வரன் திரைப்படத்தை முடித்த கையோடு அடுத்ததாக நவம்பர் 9ஆம் தேதியிலிருந்து பாண்டிச்சேரியில் தொடங்கிய மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டார் அதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் மாநாடு திரைப்படத்திலிருந்து ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு. தீபாவளிக்கு ஈஸ்வரன் டீசர் வெளியாகிய நிலையில் தற்போது மாநாடு திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக வெங்கட்பிரபு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அதில் வெங்கட்பிரபு கூறியதாவது ஈஸ்வரனுக்கு எங்கள் அப்துல் காலிக்கின் வாழ்த்துக்கள் விரைவில் மாநாடு ஃபர்ஸ்ட் லுக் எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.