தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் தனுஷின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதால் பலத்த வரவேற்பு கிடைத்தது. இதனால் தனுஷ் மற்றும் அவருடைய பட குழுவினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். இந்த சமயத்தில் நடிகர் தனுஷ் ஒரு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு உள்ளார் அப்போது இளம் நடிகையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை தான் நடிகை ராதிகா. இவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். மேலும் நடிகை ராதிகா சில தினங்களுக்கு முன் தன்னுடைய 60வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
அந்த கொண்டாட்டத்தில் பல பிரபலங்கள் மற்றும் நடிகர், நடிகைகள், அனைவரும் கலந்து கொண்டனர். கலந்து கொண்டது மட்டுமல்லாமல் நடிகை ராதிகாவிற்கு வாழ்த்துகள் தெரிவித்து வந்துள்ளனர். இந்த செய்தி அறிந்த நடிகர் தனுஷ் அவர்களும் அந்த பார்ட்டிக்கு வருகை தந்திருக்கிறார்.
விவாகரத்துக்கு பிறகு இது போன்ற நிகழ்ச்சிகளை தவிர்த்த நடிகர் தனுஷ் தற்போது இந்த பார்டியில் கலந்து கொண்டு அனைவரிடமும் உற்சாகத்துடன் பேசி இருக்கிறார். மேலும் நடிகர் சரத்குமாரின் மகள் விஜயலட்சுமி சரத்குமார் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த நெடிசங்கள் விவாகரத்தி ஆகி சில நாட்கள்தான் ஆகிறது அதற்குள் பார்டியா,? துளிகூட வருத்தம் இல்லாமல் இப்படி அரட்டை அடிக்கிரின்களே என கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.