சினிமாவிற்கு அறிமுகமாவதற்கு பல கஷ்டங்களை பட்டு பிறகு தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தர வேண்டும் என்பதற்காக தன்னுடைய உடலை வருத்திக்கொண்டு சினிமாவில் தற்பொழுது ரசிகர்களின் ஃபேவரட் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். இவருடைய நடிப்பு திறமையினால் நடிகர் கமலுக்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் விக்ரம் தான் மாஸ் நடிகர் என கூறப்பட்டு வருகிறது.
மேலும் தற்பொழுது இவருக்கு வயதானாலும் கூட தொடர்ந்து படங்களில் நடித்து ஆக்டிவாக இருந்து வருகிறார் இதன் காரணமாக ரசிகர்கள் இவரை திரையில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தியேட்டர்களுக்கு செல்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வந்த இவர் கடந்த 17 வருடங்களாக ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது அதை தவிர மற்ற படம் வரும் தோல்வி அடைந்துள்ளது.
இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது பொதுவாக இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் மிகவும் வித்தியாசமாக ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் அந்த வகையில் தற்பொழுது வெளியாகி என திரைப்படம் தான் கோப்ரா.
மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் இவருடைய நடிப்பு மட்டுமே நன்றாக உள்ளது ஆனால் கதை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் இந்த படத்திற்கு முன்பு மகான் திரைப்படம் அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலைகள் எதிர்பாராத விதமாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வெளியாகி பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இவ்வாறு இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வி அடைந்து வரும் நிலையில் தற்போது இவருடைய நடிப்பில் அடுத்தடுத்து முழு திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படங்களாவது இவருக்கு நல்ல ஒரு விமர்சனத்தை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.அந்த வகையில் தற்பொழுது பல ஆண்டுகளாக மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் மற்றும் துருவ நட்சத்திரம் இந்த இரண்டு திரைப்படங்களும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இவருடைய மூன்றாவது திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் 19ஆம் நூற்றாண்டு கதைக்களமான இந்த திரைப்படத்தினை பா ரஞ்சித் இயக்க இருக்கிறார். பிறகு சமந்தா நடிப்பில் வெளிவந்த யூ-டன் திரைப்பட இயக்குனர் பவன் குமார் மற்றும் அஜய் ஞானமுத்து உடன் இணைந்து மற்றொரு திரைப்படத்திலும் நடிக்கிறார். மேலும் இந்த படம் அனைத்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இவ்வாறு இவர் நடிப்பில் உருவாகி வரும் அனைத்து படங்களுக்கும் வெற்றி கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.