அஜித் எல்லாம் அப்புறம்தான் முதல்ல விஜய் தான்.! இப்பவே சண்டையை ஆரம்பித்த பிரபல தயாரிப்பாளர்

dil-raj
dil-raj

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இவர்களுடைய திரைப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவதன் காரணத்தினால் திரையரங்குகள் ஒதுக்கிடுவதில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ள தகவல் அஜித்தின் ரசிகர்களுக்கு பெரிதும் கடிப்பினை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தற்பொழுது நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் தில்ராஜ் இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்  இந்த திரைப்படம் தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.

அதே போல் நடிகர் அஜித் எச்.வினோத் இயக்கத்தில் போனிகாபூர் தயாரிப்பில் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். எனவே இந்த இரண்டு நடிகர்களின் திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது அந்த வகையில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி அன்று வெளியாக முடிவு செய்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தில் இந்த இரண்டு திரைப்படங்களையும் வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. உதயநிதியிடம் எப்படி திரையரங்குகள் ஒதுக்கப்பட இருக்கிறது என கேட்டதற்கு துணிவு, வாரிசு இரண்டு திரைப்படத்திற்கும் 50 சதவீதம் என பிரிக்க இருப்பதாக கூறிய நிலையில் சமீபத்தில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ் தமிழகத்தில் முன்னணி நடிகர் விஜய் தான் எனவும் எனவே அவருக்கு 50 சதவீதம் மட்டும் கொடுத்தால் எப்படி எனவும் கூறியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் நடிகர் அஜித்தை விட விஜய் தான் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர் எனவும் கூறிய நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே கூடிய விரைவில் நான் சென்னை சென்று உதயநிதி ஸ்டாலினை சந்தித்து இந்த பிரச்சனையை முடிப்பதாக சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.