சிறு வயதிலிருந்தே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருபவர் அனிகா சுரேந்திரன். இவர் தற்பொழுது முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகவும் பிசியாக வலம் வருகிறார். இவர் தமிழில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.
அதனை தொடர்ந்து மீண்டும் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்திற்கு மகளாக நடித்தார் அதனால் இவரை அஜித்தின் மகள் ஆகவே ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் அணிகா சுரேந்திரன் ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டால் அஜித் மகள் என எண்ணி ரசிகர்கள் பலரும் இதுபோல் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் உங்களை இப்படி பார்க்க முடியாது என பலரும் கூறி வந்தார்கள்.
கேரள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா சுரேந்திரன் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் ஹீரோயினாக அவதாரம் எடுத்திருக்கிறார். மேலும் அனிகா சுரேந்திரன் குறும் திரைப்படத்திலும் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் குயின் என்ற தொடரிலும் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்.
இந்த நிலையில் அனிகா சுரேந்திரன் அடுத்ததாக எந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது அப்படி இருக்கையில் அனிகா சுரேந்திரன் சமீபகாலமாக விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இப்படித்தான் பாலிவுட் மெகா ஸ்டார் நடிகர் அமிதாபச்சன் அவர்களுடன் புதிய விளம்பர படத்தில் நடிக்க இருக்கிறார்.
அதன் போட்டோஸ் இணையதளத்தில் வெளியாகி படுவேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் அனிகா சுரேந்திரன் செம மாடர்னாக செம க்யூட்டாக இருக்கிறார்.