90 காலகட்டங்களில் தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து அசத்திய அவர்கள் ரஜினி மற்றும் கமல். அத்தகைய டாப் நடிகர்களை ஆச்சரியப்பட வைத்தவர் நடிகர் விஜயகாந்த். கிராமத்து கதைகளை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்தவர் விஜயகாந்த்.
இவரது திரைப்படங்கள் வரும்போது மற்ற நடிகர்களின் படங்கள் பின்வாங்கி தான் உள்ளன. பஞ்ச் டயலாக், செண்டிமெண்ட், ஆக்சன், காமெடி என எந்த ரோல் கொடுத்தாலும் அதை திறம்பட நடித்து மக்களுக்கு விருந்து அளித்தவர் விஜயகாந்த் 90 காலகட்டங்களில் தொடர்ந்து படங்களில் நடித்து அசத்திய விஜயகாந்த் திடீரென அரசியல் பிரவேசம் கண்டால் சினிமாவே முற்றிலுமாக தவிர்த்தார்.
நடிகர் விஜயகாந்த் கடைசியாக 2010-ஆம் ஆண்டு வெளியான விருதகிரி என்ற படத்தில் நடித்தார். அதன்பின் தனது மகன் நடிப்பில் வெளியான சகாப்தம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார் அதன்பின் முழுநேர அரசியலில் இறங்கி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு உடல்நல கோளாறு காரணமாக பிரச்சனைகளை சந்தித்து வந்த இவர் அதிலிருந்து சற்று குணமாகி மீண்டும் தற்போது சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் விஜயகாந்த் நடிக்க இருக்கிறார். திடீரென இவர் படங்களில் நடிப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது காரணம் விஜயகாந்த் சரத்குமாருடன் நெருங்கிய நட்பில் ஆரம்பத்திலிருந்து இப்போதுவரையிலும் இருந்து வந்துள்ளார். சரத்குமார் கூப்பிடுவதற்கு இணங்கவே இந்த படத்தில் நடிகர் விஜயகாந்த் நடிக்கவிருக்கிறார்.
மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் மில்டன் இந்த படத்தை ஒளிப்பதிவு மற்றும் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது