நீண்ட இடைவெளிக்கு பிறகு “துணிவு “திரைப்படத்தில் தரமான சம்பவம் செய்துயுள்ள அஜித்.! என்ன தெரியுமா.?

ajith
ajith

நடிகர் அஜித்குமார் நேர்கொண்ட பார்வை வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அடுத்து ஒரு வெற்றி படத்தை கொடுக்க மீண்டும் இயக்குனர் ஹச். வினோத்துடன் கைகோர்த்து அஜித் நடித்து வரும் திரைப்படம் தான் துணிவு.. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது.

இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கின் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர். படத்தின் சூட்டிங் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் டப்பிங் பணிகளை நோக்கி பட குழு நகர்ந்து இருக்கிறது.

அண்மையில் கூட நடிகர் அஜித் டப்பிங் பேசும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரல் ஆகின. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் துணிவு படத்திலிருந்து வெளிவரும் என தெரிய வருகிறது படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு படத்திலிருந்து ஒரு சூப்பரான தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித்குமார் குத்துப் பாடல்களுக்கு எப்பொழுதுமே செம ஆட்டம் போடக்கூடிய ஒரு மனுஷன் இவர் கடைசியாக வேதாளம் திரைப்படத்தில் ஆலுமா டோலுமா பாடலுக்கு செம ஆட்டம் போட்டு இருந்தார்.. அதை தொடர்ந்து அனிருத் இந்த படத்துக்கு சில்லா செல்லா பாடலை போட்டு இருக்கிறார்.

இந்த பாடல் நல்ல வரவேற்பை மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் பெற்றுள்ளன என கூறப்படுகிறது. இந்த பாடலுக்கும் அஜித் செம்ம குத்தாட்டம் போட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த பாடலை துணிவு திரைப்படத்தில் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர்.