40 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இளசுகளை தட்டி தூக்கும் ஆறு தமிழ் நடிகைகள்.! அட இந்த நடிகையும் லிஸ்ட்டில் இருக்காங்களா.?

தமிழ் சினிமா நடிகர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ  அந்த அளவுக்கு சமீப காலமாக நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில நடிகைகள் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தில் நடித்து வெற்றி வாகை சூடுகிறார்கள்.

இந்த நிலையில் பல நடிகைகள் 30 வயது கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா என பல நடிகைகள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

அதேபோல் நாற்பது வயதைக் கடந்தும் நடிகைகள் சிலர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இளசுகள் மத்தியில் இன்னும் இளம் நடிகையாக வலம் வருகிறார்கள். அதாவது தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் கலக்கி வந்த நடிகைகள் ,பல காரணங்களை கூறி திருமணத்தை தடுத்து விட்டார்கள்.

அந்தவகையில் சில நடிகைகள் இங்கே காணலாம்.

நடிகை கௌசல்யா : நடிகை கௌசல்யா தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக விஜயுடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இவருக்கு 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை அதற்கு காரணம் சினிமாவில் ஏதாவது சாதித்துவிட்டு தான் திருமணம் செய்து கொள்வேன் என வைராக்கியத்துடன் இருக்கிறாராம்.

நடிகை நக்மா: நடிகை நக்மா பிரபு ரஜினி கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ஹிட் படங்களை கொடுத்தவர் இவர் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியும் காதலித்தார் என ஒரு காலகட்டத்தில் பேசி வந்தார்கள். அதன் பிறகு சவுரவ் கங்குலி நக்மா உடன் இருந்த உறவை பிரேக்கப் செய்துகொண்டார் பின்பு நக்மா சரத்குமாருடன் நெருங்கி பழக ஆரம்பித்தார் ஆனால் சரத் குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்ததால் நக்மா சரத்குமார் உறவு முடிவுக்கு வந்தது.  ஆனால் நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

நடிகை கிரண்: நடிகை கிரண் சீயான் விக்ரமுடன் இணைந்து ஜெமினி திரைப்படத்தில் நடித்திருந்தார் இன்றுவரை அந்த திரைப்படம் ரசிகர்களால் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.  கிரன் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் அதற்கு காரணம் இதுவரை தனக்கு ஏற்ற வாழ்க்கைத்துணை கிடைக்கவில்லை என காரணம் கூறி வருகிறார்.

நடிகை தபு.: 50 வயதைக் கடந்தும் நடிகை தபு இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை இவர் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற காரணம் மட்டும் இன்னும் பலருக்கும் தெரியவில்லை.

நடிகை சோபனா: பரதநாட்டியத்தில் பெயர் போன நடிகை சோபனா இன்று வரை திருமணம் செய்துகொள்ளவில்லை தற்போது இவருக்கு வயது 50.

ஸ்ருதி ராஜ்: இன்று சீரியல் கொடிகட்டி பறந்து வரும் நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ராஜ்.  இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வந்தவர்.  ஒரு காலகட்டத்தில் சரியான பட வாய்ப்பு அமையாததால் சீரியல் பக்கம் தனது நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தினார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வந்த ஆபிஸ் சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் அதனை தொடர்ந்து தென்றல், அழகு என பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். தற்போது இவருக்கு 40 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை இதற்கு காரணம் இதுவரை அவர் கூறியதில்லை.