இயக்குனர் மோகன் தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இதனை தொடர்ந்து தற்போது இயக்கியுள்ள திரைப்படம் திரௌபதி , இந்த திரைப்படத்தில் நாடக காதல் மற்றும் ஆவணக்கொலை பற்றி மையமாக வைத்து கதை உருவாகியுள்ளது.
ஆனால் இந்த திரைப்படத்தில் எந்த சமூகத்தைப் பற்றியோ உயர்த்திப் பேசுவது தாழ்த்தி பேசுவதும் ஒரு காட்சிகளில் கூட இடம்பெறவில்லை, இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான பொழுதே படத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் அதிகரித்தது, அதேபோல் ரிலீஸ் செய்வதில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இந்த நிலையில் பல எதிர்ப்புகளையும் தாண்டி திரௌபதி திரைப்படம் நேற்று திரையரங்கிற்கு வந்துள்ளது, முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியானால் அதிகாலை காட்சியை வெளியிடுவார்கள், அதேபோல் இந்த திரைப்படத்திற்கும் பல இடங்களில் சிறப்பு காட்சியாக 27ஆம் தேதி இரவு வெளியிட்டார்கள்.
இந்த திரைப்படத்தை பல பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் படத்தைப் பார்த்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள், இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பெண்கள் விரும்பும் திரைப்படமாக உருவாகியுள்ளது, இந்த திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது, அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை வெறும் 50 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
ஆனால ரிலீஸான முதல் நாளே நேற்று மட்டும் ஷேர் 80 லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது, இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் 2 கோடியே 50 லட்சம் ரூபாயை முதல் நாளில் வசூல் செய்துள்ளது, முப்பது வருட சினிமா வரலாற்றில் படத்தின் பட்ஜெட்டை தாண்டி ஐந்து மடங்கு வசூலை பெற்ற திரைப்படம் என்ற பெருமையை திரவுபதி படம் பெற்றுள்ளது, இதை பாக்ஸ் ஆபீஸ் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.