வெள்ளித்திரையில் பல ஹிட்டடிக்கும் திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர்கள் எல்லாம் ஒரு காலத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதன் மூலமாக தனக்கென ஒரு இடத்தை தற்போது நிரந்தரமாக பிடித்துள்ளார்கள்.
மேலும் அந்த வகையில் வலம் வந்தவர் அட்லி இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான எந்திரன் திரைப்படத்தில் இயக்குனர் ஷங்கருக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார்.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்களிடையே தனது முகத்தை பதிய வைத்தார்.
மேலும் அதனைத் தொடர்ந்து இளைய தளபதி விஜயுடன் கைகோர்த்து தெறி,மெர்சல், பிகில் போன்ற பல ஹிட்டடித்த திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் அட்லீ.
இந்நிலையில் அட்லி பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாரூக்கானை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் இந்த படத்தின் பணிகள் கடந்த இரண்டு வருடங்களாகவே நடைபெற்று வருகிறதாம்.
இந்த படத்திற்காக அட்லிக்கு சுமார் 40 கோடி வரை சம்பளம் பேசப்பட்டு இருந்த நிலையில் 35 கோடிக்கு இறுதி செய்யப்பட்டு உள்ளதாம்.
இதனைத் தொடர்ந்து இந்தியன்டூ திரைப்படத்திற்காக இயக்குனர் ஷங்கர் 25 கோடி சம்பளம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் கற்று தந்த குருவையே மிஞ்சிகிறீர்கள் போல என கூறி வருகிறார்கள்.