28 வருடங்களுக்கு பிறகு உருவாகும் ஷங்கரின் மெகா ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா.? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்.

director-shankar-

1993 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியாகிய திரைப்படம்தான் ஜென்டில்மேன் இந்த திரைப்படத்தில் மது கேட்டி குஞ்சுமோன், கவுண்டமணி, செந்தில், வினித்,சரண்ராஜ் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

அப்போதைய காலகட்டத்தில் ஒரு மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 2 மில்லியன் வரை வசூல் ஈட்டியது அதனால் இந்த திரைப்படம் வெற்றித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியான நிலையில் இந்த திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஜென்டில்மேன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் இருபத்து எட்டு வருடங்களுக்கு பிறகு உருவாக இருப்பதாக பிரபல தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் அறிவித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் பாகுபலி திரைப்படத்திற்கு இசைஅமைத்த மரகதமணி எனவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜென்டில்மேன் 2 ஹீரோ யார் இயக்குபவர் யார் என்பதை விரைவில் படக்குழு அறிவிக்க இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

nayanthara
nayanthara