28 வருடம் கழித்து நவரச நாயகன் கார்த்திக் உடன் ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை.! இதோ படத்தின் டைட்டில்

karthik
karthik

28 வருடங்களுக்கு முன்பு நவரச நாயகன் கார்த்திக் அவர்களுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஒருவர் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

1993 ஆம் ஆண்டு ராஜ்குமார் இயக்கத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடித்த திரைப்படம் ‘சின்ன ஜமீன்’. இந்த திரைப்படத்தில் கார்த்திக் அவர்களுக்கு ஜோடியாக சுகன்யா நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில்.

தற்பொழுது சுகன்யா நவரச நாயகன் கார்த்தியுடன் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறார். அந்த திரைப்படத்திற்கு ‘தீ இவன்’ என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை ஜெயமுருகன் என்பவர் இயக்க இருக்கிறார் மேலும் நவரச நாயகன் கார்த்தியை ஏன் தேர்வு செய்தார் என்பதை இயக்குனர் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அதாவது படத்திற்கு நவரச நாயகன் கார்த்தி மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என கருத்தில் கொண்டுதான் அவருக்கு ஜோடியாக சுகன்யாவை சேர்த்துள்ளதாக இயக்குனர் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சமுதாய கருத்துகளை தெரிவிக்கும் ஒரு திரைப்படமாக அமையும் என கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல். இந்த திரைப்படத்திற்கு தீமைகளை அழிக்க கூடியவன் என்பதுதான் படத்தின் டைட்டிலுக்கு அர்த்தம் என கூறியுள்ளார்.

karthi suganya
karthi suganya

மேலும் இந்த திரைப்படம் 70 சதவீத படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு திருச்சி, பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஆர்த்திகா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

விரைவில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து திரைப்படம்  திரைக்கு வர இருக்கிறது.

karthi suganya
karthi suganya
karthi suganya
karthi suganya