விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் விஜய் வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வந்த நிலையில் இந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதிக்குள் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது என்றும் அனைத்து வேலைகளையும் பரபரப்பாக செய்யப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் பிஸியாக இருந்த வருவதால் இந்த படத்தின் சூட்டிங் முடித்துவிட்டு விரைவில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய உள்ளார். படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பாகவே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், பிரித்திவிராஜ், உள்ளிட்டா பல பிரபலங்கள் நடிக்க இருக்கின்றனர்.
அந்த வரிசையில் தற்போது சூர்யாவும் இணைந்து உள்ளார் இது பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது விக்ரம் திரைப்படத்தில் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தளபதி 67 திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்களை உள்ளது.
இந்த திரைப்படம் லோகேஷ் சினிமா டிக்கில் இணையும் மூன்றாவது திரைப்படம் ஆக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் பார்த்தது அதில் கமலின் நடிப்பு எந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்ததோ அதே அளவிற்கு கடைசி ஐந்து நிமிடங்கள் மட்டுமே வந்த சூர்யாவின் நடிப்பும் ரசிகர்களை எழுந்திருக்க வைத்து அலப்பறை செய்தது அந்த அளவிற்கு சூர்யா அவர்கள் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
விக்ரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆலுடன் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தில் பலரையும் மிரட்டிய ரோலக்ஸ் கதாபாத்திரம் தளபதி 67 திரைப்படத்தில் வர இருப்பது அனைவரும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அப்படி இந்த படமும் ஒரு கேங்க்ஸ்டார் திரைவிடமாக இருக்கும் என பேசப்பட்டு வருகிறது.
மேலும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சூர்யா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது அதே சமயம் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் தனுசிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் ஆகி உள்ளது.