20 வருடம் கழித்து பட்டி டிங்கரிங் பார்த்து ரிலீஸாகும் கமல் திரைப்படம்.! இது வேற லெவல் படம் ஆச்சே

kamal-alavanthan
kamal-alavanthan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன் இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருவது உண்டு. அதேபோல் தான் நடிக்கும் திரைப்படத்தில் அதே கதாபாத்திரமாகவே மாறி விடுவார் நடிகர் கமல்.

இந்த நிலையில் 2001 ஆம் ஆண்டு கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம்தான் ஆளவந்தான் கமலஹாசன் இந்த திரைப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். அதாவது சைக்கோ வாகவும் கமாண்டர் ஆகிய இரண்டு வித்தியாசமான வேடத்தில் நடித்து மிரட்டினார்.

அதேபோல் இந்த திரைப்படத்தில் ரவீனா டாண்டன்  கதாநாயகியாக நடித்திருந்தார். ஆளவந்தான் திரைப்படம் 20 வருடத்திற்கு முன்பு வெளியானாலும் கிராபிக்ஸில் பல காட்சிகளை அற்புதமாக செதுக்கி இருந்தார்கள். ஆனால் ஆளவந்தான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறவில்லை  அதனால் தயாரிப்பாளர் தாணு அவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம்.

kamal alavanthan
kamal alavanthan

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் ஒரு சில பட்டி டிங்கரிங் செய்து மீண்டும் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இந்தமுறை இந்த திரைப்படம் மிகச் சிறந்த அளவில் வெற்றிபெறும் எனவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். ஆரம்பத்தில் இந்த திரைப்படம் வெளியான பொழுது ரசிகர்களுக்கு புரியாமல் போனது ஆனால் அதன்பிறகு நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

ஆளவந்தான் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளை பார்த்து ஹாலிவுட் இயக்குனர் மிரண்டுபோய் அந்த காட்சிகளை தன்னுடைய படத்திலும் வைத்ததாக அந்த இயக்குனர் தன்னுடைய பேட்டியில் கூறியிருந்தார்.