19 வருடங்களுக்குப் பிறகு தளபதி 67 படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்.! அப்போ பாட்டு ஒவ்வொன்றும் மரண ஹிட்தான்.!

தளபதி விஜய் பிஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.  இந்த நிலையில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் 60 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த திரைப்படத்தில் சரத்குமார் ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ்  யோகி பாபு  சங்கீதா என பலர் இணைந்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப பாங்கான கதை என்பதால் படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. ஆனாலும் பீஸ்ட் திரைப்படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் பூர்த்தி செய்யவில்லை என பெரும் குற்றச் சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில்  தளபதி 67வது திரைப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கயிருக்கிறார்.

இவர் தற்பொழுது கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. விஜயுடன் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தில் இணைந்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது இந்த நிலையில் மீண்டும் இவர்களது கூட்டணியில் தளபதி 67  உருவாக இருப்பதால் ரசிகர்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மாஸ்டர் திரைப்படம் 50% லோகேஷ் கனகராஜ் படமாகவும் 50% விஜய் படமாகவும் உருவானது ஆனால் தளபதி 67வது திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் திரைப் படமாக உருவாக இருக்கிறது அதனால் இந்த திரைப்படத்தில் ஹீரோயின் இருக்க மாட்டார் எனவும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் பாணியில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக முதன்முதலில் அனிருத் தான் இசையமைக்கப் போகிறார் என பலரும் கூறினார்கள்.

அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்திற்கு அனிருத் தான் பெரும்பாலும் இசையமைத்து வருகிறார்.இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தளபதி 67வது திரைப் படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க இருக்கிறார் என கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

ஏனென்றால் யுவன்  சங்கர் ராஜா மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் படுவேகமாக வைரலானது அப்படி இந்த கூட்டணி இணைந்தால் 19 வருடங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி ஒன்றாக இணைய இருக்கிறது என கூறப்படுகிறது இதற்கு முன் விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா புதிய கீதை என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்திருந்தார்கள் இந்த திரைப்படம் வெளியாகி 19 வருடங்கள் ஆகிவிட்டது.

lokesh kanagaraj thalapathy 67
lokesh kanagaraj thalapathy 67