தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர், இவர் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல் கோலாகலமாக கொண்டாடுவார்கள் ரசிகர்கள், இந்த நிலையில் இவர் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் திருமலை.
திருமலை திரைப்படம் விஜய் திரைப்பயணத்தில் அவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தியது, அதேபோல் இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக அமைந்தது, இந்த திரைப்படம் வெளியாகி இதுவரை 17 வருடங்கள் ஆனாலும் இந்த திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள் என்றால் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கண்டு களிப்பார்கள்.
திருமலை திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார் விஜய் படத்தில் ஒரு மெக்கானிக்காக நடித்திருப்பார் அந்த கடையில் உதவியாளராக இருந்தவர் ஒரு சிறுவன், அவர் பெயர் உதயராஜ், அந்த திரைப்படத்தில் அந்த சிறுவனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் அந்த சிறுவன் நடித்துள்ளார், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் திரைப்படமான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார், இந்த திரைப்படத்தில் 17 வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த சிறுவன் நடித்துள்ளார்,
இவர் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க உதவியாக இருந்த லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார், இவர் இதற்க்கு முன் கைதி படத்திலும் நடித்துள்ளார். அதேபோல் நாட்டாமை திரைப்படத்தில் சிறுவனாக நடித்த மகேந்திரனும் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம், இத்தனை பிரபலங்களும் இடத்தில் உள்ளதால் படம் மாஸாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.