Chaya singh video:தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சாயாசிங். இவர் தனுஷ் நடிப்பில் 2003ம் ஆண்டு வெளிவந்த திருடா திருடி என்ற திரைப்படத்தில் நடித்த முதல் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தாலும் இன்றளவும் இவர் ஃபேமஸாக இருக்க காரணமாக அமைந்தது மன்மதராசா பாடல் இப்பாட்டில் தனது சிறந்த நடனத்தை வெளிப்படுத்தி தற்போது வரையிலும் தன்னை தமிழ் சினிமாவில் தன்னை தக்க வைத்துக் கொண்டு வருகிறார் சாயாசிங்.
தமிழில் திருடா திருடி படத்தை தொடர்ந்து அவர் கன்னட பக்கம் தனது திசையை திருப்பி பிஸியாக நடித்து வந்தார் இவர் நடித்த படங்களான சிட்டி, ஹசீனா, குட்டு, முன்னாடி போன்ற படங்கள் நல்லதொரு வரவேற்பை பெற்றவர் இதனைத்தொடர்ந்து அவர் தமிழில் கவிதை, அருள், ஜெய்சூர்யா ,போன்ற படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகை என்ற இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை இதனை தொடர்ந்து அவர் மீண்டும் பிறமொழி படங்களில் தனது கவனத்தை மாற்றி நடித்து வந்தார் அதன்பின் கடந்த 2012ஆம் ஆண்டு குணச்சித்திர நடிகரான கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பின் படிப்படியாக தனது சினிமா உலகை விட்டு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளார் சாயாசிங் இருப்பினும் வருகின்ற ஒரு சில படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டி வருகிறார் அந்த வகையில் இவர் உயிரே உயிரே, ஆக்சன் ,பவர்பாண்டி, உள்குத்து, இரவுக்கு ஆயிரம் கண்கள், பட்டினபாக்கம் போன்ற படங்களில் நடித்து தனது சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
இந்த நிலையில் சாயா சிங் அவர்கள் தனது பிறந்த நாள் பரிசாக ரசிகர்களுக்கு சின்ன ட்ரீட் கொடுத்து உள்ளார். 17வருடங்கள் கழித்து சாயாசிங் மற்றும் நடன இயக்குனர் சிவசங்கருடன் இணைந்து மன்மத ராசா பாடலுக்கு குட்டி நடனம் போட்டனர். அந்த வீடியோ சமூகவலை தளத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது
வீடியோ இதோ.
#chayasingh #actress pic.twitter.com/OuD7rGSwPa
— Tamil360Newz (@tamil360newz) May 19, 2020