வெள்ளி திரையில் பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக்கொண்ட நடிகை தான் திரிஷா.
மேலும் இவர் தற்போது பிரபல நடிகருடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் இணையதளத்தில் கசிந்துள்ளது.
ஆம் அந்த தகவலில் இவர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான லூசிபர் திரைப் படத்தின் ரீமேக்கில் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மோகன் ராஜா இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சிரஞ்சீவியை நடிக்க வைக்க போகிறாராம்.
இதனையடுத்து சிரஞ்சீவியும் திரிஷாவும் கடந்த 2006ஆம் ஆண்டு ஸ்டாலின் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து இருந்தார்கள்.
இந்நிலையில் மீண்டும் சிரஞ்சீவியும் திரிஷாவும் கை கோர்க்க உள்ளதால் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகமா இருக்கிறார்கள்.
இந்த தகவல் தற்பொழுது திரிஷாவின் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த தகவலை பற்றி ஏதாவது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருமா என்றும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.