தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் பாலா அவர்களும் ஒருவர் இவர் இயக்கத்தின் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன அதுமட்டுமில்லாமல் பாலா திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும்.
அதேபோல் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் திரைப்படங்கள் கொடுத்து வருபவர் நடிகர் சூர்யா. இவர் சமீப காலமாக ரசிகர்கள் சந்தோஷம் அடையும் அளவிற்கு படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த அளவு கதை தேர்வில் மிகவும் கவனமாக இருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம் ஒன்று உருவாக இருக்கிறது இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்க இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சூர்யா மற்றும் பாலா பல வருடங்களுக்கு முன்பு பிதாமகன் மற்றும் நந்தா திரைப்படத்தில் நடித்து இருந்தார்கள். இந்த நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து படங்களில் பணியாற்ற இருக்கிறார்கள் அதனால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய சிறப்பு என்றால் சூர்யாவுடன் இணைந்து சூர்யாவின் மனைவி ஜோதிகா நடிக்க இருக்கிறார் வெகு காலம் கழித்து இவர்கள் இருவரும் ஒன்றாக நடிக்க இருக்கிறார்கள் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு தொடங்க இருக்கிறது. பாலா அவர்கள் கதை என்றாலே சொல்ல வேண்டாம் ஏனென்றால் லாஜிக் தவறாமல் படத்தை எடுக்க கூடியவர்.
ஆனால் இந்த திரைப்படத்தில் கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறார். அப்பொழுது படத்தைப் பற்றி சொல்லவா வேண்டும் பொருத்திருந்து பார்க்கலாம். மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஸ்கெட்ச் திரைப்படத்தின் செட்டுகளை அலங்கரித்த கலை இயக்குனர் மாயா பாண்டி தான் இந்த படத்திற்கும் செட் வேலைகளை கவனித்து வருகிறார்.
தொடர்ந்து மாயா பாண்டி தனது பணியை சிறப்பாக செய்து வருவதால் இவரை பாலா தேர்வு செய்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்திற்கான கலைஞர்களை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறார் பாலா முதலில் சூரியா காட்சிகளை படமாக எடுத்து விட்டு அதன்பிறகு மற்ற காட்சிகளை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளாராம். இந்த சந்தோஷத்தை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் என்னை விட என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளவர் ஒரு புதிய உலகை எனக்கு அடையாளம் தந்தவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே ஆர்வத்துடன் ஒரு அழகிய பயணம் பாலா அண்ணனுடன் என பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்தாலே சூர்யாவிற்கு பாலா எவ்வளவு முக்கியத்துவம் என அனைவருக்கும் தெரியும். 2006 ஆம் ஆண்டு சூர்யா ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல் அந்த திரைப்படத்திற்கு பிறகு ஜோதிகா பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது சூர்யாவுடன் ஜோதிகா இணைந்து நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வைரலாகி வருகிறது சமூக வலைதளத்தில்.