நடிகர் சிம்பு தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று அசத்தியது இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்துவரும் திரைப்படம் பத்து தல..
இந்த படம் ஒரு ரீமேக் திரைப்படமாக இருந்தாலும் இந்த படம் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் இந்த படத்தில் சிம்பு ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் கைக்கோர்த்து கௌதம் கார்த்திக், கலையரசன், ப்ரியா பவானி சங்கர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்..
இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் வேற லெவலில் எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை என இயக்குனர் கூறி இருக்கிறார் ஆனால் படத்தை சீக்கிரமாகவே முடித்துவிட்டு டிசம்பர் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் சிம்பு குறித்து ஒரு சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது அதாவது நடிகர் சிம்புவை வைத்து பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மீண்டும் ஒரு படத்தை எடுக்க இருக்கிறாராம்.. அந்த படம் வேற எதுவும் இல்லை.. விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க அவர் திட்டமிட்டு இருக்கிறாராம்.
முதல் பாகம் ஏற்கனவே வெளிவந்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது சிம்பு பத்து தல படத்தின் ஷூட்டிங் முடித்து விட்டால் உடனே தாண்டி வருவாயா படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க ரெடியாக இருக்கிறாராம் இந்தப் படத்திலும் சிம்பு ஜோடியாக திரிஷா நடிக்க இருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தைகள் தான் தற்பொழுது போய்க்கொண்டிருக்கிறதாம்…