12 வருடங்களுக்குப் பிறகு பிரபல முன்னணி நடிகையுடன் ஒன்றிணையும் சிம்பு.! வெளிவந்த மாஸ் அப்டேட்..

simbu
simbu

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக நடிகர் சிம்பு கடைசியாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்றது. மேலும் இந்த படத்தின் இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் தற்பொழுது பத்து தல திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்காகவும் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்து வரும் நிலையில் தற்போது சிம்பு நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தற்பொழுது ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்படையில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதல் அம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகி இருந்த நிலையில் இளசுகளின் மனதை பெரிதளவிலும் கவர்ந்தது.

இந்த படத்தில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் சிம்புவும், ஜெசி என்ற கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடித்திருந்தார்கள் இந்த கதாபாத்திரத்தை தற்பொழுது வரையிலும் ரசிகர்களால் மறக்க முடியாது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் வெந்து தணிந்தது காடு வெற்றிக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாகும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

ஆனால் தற்பொழுது விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தான் உருவாக இருக்கிறது. தற்பொழுது கெளதம் மேனன் பட வேலைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார் மேலும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல திரைப்படமும் ரிலீஸ் ஆகும் தேதி தள்ளி போய் வரும் நிலையில் இதற்கிடையில் கௌதம் மேனன் சிம்புவை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை இரண்டாவது பாகத்தை தொடங்கி விடலாம் என முடிவெடுத்து இருக்கிறாராம். இதற்காக திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.