தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன் இவர் சில வருடங்களுக்கு முன்பாக தனுஷை வைத்து ஆடுகளம் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி மாபெரும் வெற்றி பெற்றது.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு பிறகாக சேவல் சண்டையானது தமிழ்நாட்டில் மிகவும் அதிகமாகி விட்டது. மேலும் தனுஷுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றாலும் அது ஆடுகளம் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தின் இவற்றின் மூலம்தான் அவருக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.
இவ்வாறு பிரம்மாண்டமான இந்த திரைப்படத்தைப் பற்றிய ஒரு சுவாரசியமான விஷயம் வெளிவந்துள்ளது அதாவது என்னவென்றால் இந்த திரைப்படத்தில் மூன்று முக்கிய நடிகர்களுக்கு மூன்று துறை சார்ந்த நபர்கள் குரல் கொடுத்துள்ளார்கள்.
அதாவது இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக அமைந்த பேட்டைக்காரன் என்ற கதாபாத்திரத்திற்கு நடிகர் ராதாரவி அவர்கள்தான் குரல் கொடுத்துள்ளாராம். ஆனால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை இவர்தான் குரல் கொடுத்தார் என்று.
மேலும் தனுஷிற்கு அண்ணனாக நடித்த துரை கதாபாத்திரத்திற்கு பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான சமுத்திரக்கனி அவர்கள்தான் குரல் கொடுத்தாராம் வெற்றிமாறனும் சமுத்திரக்கனியும் நெருங்கிய நண்பர் என்று நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை டாப்சிக்கு யார் குரல் கொடுத்தார் என்று கேட்டால் மிரண்டு போய்விடுவீர்கள் ஏனென்றால் அவருக்கு குரல் கொடுத்தது நடிகை ஆண்ட்ரியா தானாம் ஆனால் இவர்கள் தான் குரல் கொடுத்தார்கள் என்பதை கொஞ்சம் கூட வெளிக்காட்டாமல் இயக்குனர் வெற்றிமாறன் மிகச் சிறப்பாக கையாண்டு உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இவர்கள் அனைவருமே 3 துறையை சார்ந்தவர்கள் ஒருவர் நடிகர் ஒருவர் இயக்குனர் மற்றொருவர் பாடகர் என வெவ்வேறு துறையைச் சார்ந்தவர்கள் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள்.