தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இவர்கள் இருவரும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் அந்த வகையில் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்க போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் முன்னணி நடிகரான பிருதிவிராஜ், பிஜீ மேனன் இவர்கள் இருவரும் இணைந்து கடந்த ஆண்டு நடித்து வெளிவந்த திரைப்படம் ஐயப்பன் கோஷியும். இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க மற்ற மொழி பிரபலங்கள் போட்டி போட்டு வந்தனர்.
இந்த நிலையில் தமிழில் ஆடுகளம் படத்தை தயாரித்த கதிரேசன் அவர்கள் இப்படத்தின் ரீமேக் உரிமத்தை ஏற்கனவே கைப்பற்றி விட்டார் இதனையடுத்து இப்படத்தில் இரு ஹீரோக்கள் நடிக்க வேண்டிய உள்ளதால் யாரை நடிக்க வைப்பது என்று யோசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்படத்தில் சரத்குமார் மற்றும் சசிகுமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது அதன்பின் சசிகுமார் மற்றும் ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது பிரித்திவிராஜ் கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்தால் சிறப்பாக இருக்காது என நெட்டிசன்கள் கூறி வந்தனர்.
தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கும் அண்ணன் தம்பியான சூர்யா கார்த்தி. இவர்கள் இருவரும் இணைந்து இப்படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என பலர் கூறி வருகின்றனர். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றன. இருப்பினும் கதிரேசன் அவர்கள் யாரை தேர்வு செய்யப் போகிறார் என்பது மிக பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது இருப்பினும் விரைவில் இப்படம் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது பொறுத்திருந்து பார்ப்போம்.