சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் உடன் கைகோர்த்து தனது 169 வது திரைப் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜெயிலர் என தற்போது பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தை இளம் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயங்கி வருகிறார் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் தற்பொழுது போய்க்கொண்டிருக்கிறது இந்த படம் ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருக்கும் என தெரிய வருகிறது. ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
படப்பிடிப்பு வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது இதை முடித்துவிட்டு ரஜினி அடுத்ததாக ஒரு இளம் இயக்குனருடன் கைகோர்க்க இருக்கிறார் அந்த இயக்குனர் வேறு யாரும் அல்ல டான் படத்தை இயக்கி அறிமுகமான சிபி சக்கரவர்த்தியுடன் தான் ரஜினி கைகோர்க்க இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் ஆகியவரிடம் அவர் கதை கேட்டு இருந்தாலும்..
சிபி சக்கரவர்த்தி டான் படத்தின் வெற்றியின் மூலம் ரஜினியின் மனதில் இடம் பிடித்துள்ளார் மேலும் அவர் சொன்ன கதையும் ரொம்ப பிடித்துப் போனதால் தற்பொழுது அவருடன் கைகோர்க்க இருப்பதாக கூறப்படுகிறது ஒரு இளம் இயக்குனர் இரண்டாவது படமே ரஜினியை வைத்து இயக்குவது தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
ஜெய்லர் படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு ரஜினி தனது 170 வது திரைப்படத்தில் இணைய இருக்கிறார் அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார் என கூறப்படுகிறது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றன.