தமிழ் சினிமா உலகில் ஏகப்பட்ட படங்கள் வெளியாகி வெற்றி கண்டுள்ளன ஆனால் தமிழ்நாடே ஒரு படத்திற்காக காத்துக் கொண்டிருந்தது என்றால் அது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்துக்கு தான் பொன்னியின் செல்வன் நாவலை பலர் படித்திருனர் ஆனால் படமாக பார்த்தது கிடையாது.
இதனால் பொன்னியின் செல்வன் படத்தில் காண எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. மணிரத்தினம் 500 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து இருக்கிறார். முதல் பாகம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலரும் போட்டி போட்டு கொண்டு படத்தை பார்த்தனர்.
படம் எதிர்பார்த்ததை விட சூப்பராக இருந்ததால் பலரும் நல்ல கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு வருகின்ற நாட்களிலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்தை குறிப்பாக ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்கள் பார்க்க முதல் நாளில் ஆசைப்பட்டுள்ளனர்.
ஒரு சில நடிகர்கள் முன்பதிவு பண்ணியவர்கள் படத்தை பார்த்து விட்டனர் இன்னும் ஒரு சில நடிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனராம். இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க முதல் நாளே வந்துள்ளார்.
நடிகர் விக்ரம் சென்னையில் உள்ள பாலோ திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைப் பார்த்து கண்டு களித்தார். மேலும் அங்கே புகைப்படமும் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படங்கள் தான் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.