aditi shankar : டாப் நடிகர், நடிகைகளின் வாரிசுகளை தொடர்ந்து இயக்குனர்களின் வாரிசுகளும் சினிமா உலகில் மாஸ் காட்டுகின்றனர் அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் கார்த்தி நடிப்பில் உருவான “விருமன்” படத்தில் நடித்து அறிமுகமானார்.
இவருடையே முதல் படமே பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகை அதிதி ஷங்கருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது அந்த வகையில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் இணைந்து வடிவேலு, சரிதா, மிஷ்கின் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து அண்மையில் டிரைலர் வெளிவந்து பெரிய வரவேற்ப்பை பெற்றதைத் தொடர்ந்து டப்பிங் பணிகள் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது படம் வருகின்ற ஜூலை 14-ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிதி ஷங்கர் பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது.. எனது அப்பா இயக்கும் படத்தில் நடிக்க ஆசை என கூறினார். மகளாக அப்பாவின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று பலமுறை பார்த்திருக்கிறேன் அவரது படத்தில் நடிக்க வேண்டும் என கூறினார்.
மேலும் நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை எடுத்த ஜவகர் மித்திரன் இயக்கத்தில் நடிக்கவும் ஆசை அதே போல லவ் டுடே படத்தை இயக்கி வெற்றிகண்ட பிரதீப் ரங்கநாதன் படத்திலும் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். விஷயத்தைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் உங்களுடைய திறமைக்கு நிச்சயம் நீங்க சொன்ன எல்லா இயக்குனரிடமும் படம் பண்ணுவீங்க எனக்கூரியே கமெண்ட் அடித்து வருகின்றனர்.