சினிமா உலகில் நடிக்க ஆசை இருப்பவர்கள் தனது திறமையை சூப்பராக வளர்த்துக்கொண்டு படங்களில் நடித்து எடுத்த உடனேயே வெற்றியை பெறுவார்கள் அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் டாக்டர் படிப்பை படித்திருந்தாலும் அவருக்கு சினிமாவில் நடிகையாக வேண்டும் என்பதே ஆசையாம்.
அதை அவரது அப்பாவிடம் சொல்ல அவரே சம்மதிக்க தற்பொழுது ஹீரோயின்னாக அறிமுகமாகி அசத்தி உள்ளார் நடிகை அதிதி ஷங்கர். முதலில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான விருமன் படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார். இந்த படத்தில் கார்த்தி, அதிதி சங்கருடன் கைகோர்த்து சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், சூரி, சிங்கம் புலி, மனோஜ் மைனா நந்தினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
முதல் படத்திலேயே அதிதி ஷங்கர் சூப்பராக நடித்ததால் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன்னுடன் கைகோர்த்து அதிதி ஷங்கர் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகப்பட்ட நிலையில் தற்போது அது குறித்து தகவலும் கிடைத்துள்ளது.
அதாவது சிவகார்த்திகேயனுக்கும் சரி அதிதி ஷங்கருக்கும் மாவீரன் திரைப்படம் முக்கிய படம் இந்த படத்தின் ஷூட்டிங் தற்பொழுது தொடங்கி உள்ளது அதனை முன்னிட்டு நடிகை அதிதி சங்கர் முதல் நாள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு..
மாவீரன் திரைப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் நான் இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம அழகாக இருக்கிறீர்கள் என கூறி புகைப்படத்திற்கு லைக்குகளையும், கமெண்ட்களையும் போட்டு வருகின்றனர் இதோ சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை அதிதி சங்கரை நீங்களே பாருங்கள்..