விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் பிரபல நடிகரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.! யார் அந்த ஹீரோ தெரியுமா.?

aditi-shanakar
aditi-shanakar

திரைஉலகம் காலத்திற்கு ஏற்றவாறு மாறுகிறது என நாம் சொல்லுவது உண்மை என்றால் அதை மாற்றி அமைப்பது இயக்குனர்கள் தான் என்று கூற வேண்டும் அவர்கள் தான் காலம் முன்னேற முன்னேற புதிய தொழில்நுட்பத்தை கையாள்வதும் படத்தை எச்டி தரத்திலும் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுத்து மக்களுக்கு விருந்து படைக்கின்றனர் அந்த வகையில் அதை பல வருடங்களாக செய்து வருகிறார் இயக்குனர் ஷங்கர்.

திரை உலகில் இவர் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் தான் மேலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அந்த படத்தின் பட்ஜெட்டை விட பல கோடி லாபம் பார்த்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் இவரும் இணைந்து உள்ளது.

இவரைத் தொடர்ந்து அவரின் இளைய மகள் அதிதி சங்கர் தனது படிப்பு சார்ந்த தொழிலை தூக்கி எறிந்துவிட்டு அப்பாவைப் போல இவரும் சினிமா உலகில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டினார் அதன் விளைவாகவே தற்போது கார்த்தியின் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தில்  புதுமுக நடிகையாக அறிமுகமாக உள்ளார்.

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் தொடங்கியது மட்டுமல்லாமல் இவர் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் செம்மயான லைக்குகளை அள்ளியது. அந்த படப்பிடிப்பின் பூஜையின் பொழுது பட குழுவினருடன் சேர்ந்து பாலா பாண்டிராஜ் லிங்குசாமி போன்ற பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

அவர்களைத் தொடர்ந்து அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நாயகனாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார். அதிதி சங்கர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரிடம் வாழ்த்து பெற்றார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் கசிந்துள்ளது இதோ நீங்களே பாருங்கள்.